இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி... ஒரேயடியாக சரிவடைந்த சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு பெருமளவில் குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க மக்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோப்ர் 7ம் திகதிக்கு பின்னர் பெரும்பாலான அமெரிக்க மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணப்படுவதை தவிர்த்துள்ளதாகவும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணங்களையும் ரத்து செய்துள்ளனர்.
@ap
மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, பெரும்பாலான நாடுகளுக்கு பயணப்படுவதை அமெரிக்க மக்கள் குறைத்துக் கொண்டுள்ளதாகவே தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் உலகளாவிய பயண தேவையும் பெருமளவில் சரிவடைந்துள்ளது என்றே கூறப்படுகிறது. இந்தப் போர் பேரழிவு தரும் இதயத்தை நொறுக்கும், மனிதப் பேரிடர் என குறிப்பிட்டுள்ள பிரபலம் ஒருவர், நாம் நமது தொலைக்காட்சித் திரைகளில் அந்த கொடூரங்களை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.
@reuters
26 சதவீதம் சரிவடைந்துள்ளது
இதன் காரணமாகவே, அந்த பிராந்தியங்களுக்கு மக்கள் பயணப்பட அஞ்சுவதாகவும், வேறு நாடுகளுக்கும் பயணப்படும் நம்பிக்கையைக் கூட மக்கள் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு மூன்று வாரங்களில் அமெரிக்காவிலிருந்து சர்வதேச விமான முன்பதிவு 10% சரிவடைந்துள்ளது என்றே தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
@getty
அத்துடன், மத்திய கிழக்கில் உள்ள மக்கள் அதே காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு பயணப்படுவது 9% வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணப்படும் மக்களின் எண்னிக்கை 26 சதவீதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |