மேலதிக பணயக்கைதிகள் விடுவிக்கப்படலாம்... இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக்கொண்ட புதிய ஒப்பந்தம்
இஸ்ரேல் - ஹமாஸ் படைகள் இடையிலான போர்நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கத்தார் மற்றும் ஹமாஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலதிக எண்ணிக்கையில்
இஸ்ரேல் இன்னும் இது தொடர்பில் உறுதி செய்யவில்லை, ஆனால் வரும் நாட்களில் மேலதிக எண்ணிக்கையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
@afp
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் எகிப்துடன் கத்தார் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் மத்தியஸ்தத்தின் ஒரு பகுதியாக, காசா பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
39 பாலஸ்தீன மக்கள்
இதனிடையே, கத்தார் மற்றும் எகிப்து உறவுகளின் கோரிக்கையை ஏற்று தற்காலிக மனிதாபிமான போர்நிறுத்தத்தை முந்தைய போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
@afp
இரு தரப்புகளுக்கு இடையே நான்கு நாள் போர் நிறுத்தத்தின் இறுதி நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, 14 இஸ்ரேலியர்கள் மற்றும் மூன்று தாய்லாந்து நாட்டவர்களை நான்கு நாள் போர்நிறுத்தத்தின் கீழ் மூன்றாவது பரிமாற்றத்தில் ஹமாஸ் விடுவித்தது.
பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் வாடும் 39 பாலஸ்தீன மக்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், விடுவிக்கப்படும் ஒவ்வொரு10 பணயக்கைதிகளுக்கு பதிலாக ஒரு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என இஸ்ரேல் நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |