எந்தவொரு போரிலும் இது போல் இல்லை..!காசாவில் கொல்லப்பட்ட ஐ.நா ஊழியர்கள் எண்ணிக்கை
இஸ்ரேல் ஹமாஸ் போரில் உயிரிழந்த ஐ.நா ஊழியர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
உயிரிழந்த ஐ.நா ஊழியர்கள்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 37 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.
இதில் இரு தரப்பிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
SAMAR ABU ELOUF / THE NEW YORK TIMES
மேலும் காசாவில் இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு தாக்குதலால் ஆயிரக்கணக்கான மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் இதுவரை 102 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 27 பேர் படுகாயமடைந்து அடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவரை நடைபெற்ற போர்களில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் தான் அதிகமான ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா-வை சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |