நரகமாக மாறப்போகும் இஸ்ரேலும் காசாவும்! அடுத்து நடக்கப்போவது என்ன?
காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகின்றார்கள்.
இதன்போது ஹமாஸ் அமைப்பானது 'இஸ்ரேலியர்கள் உண்மையான நரகத்தைப் பார்க்கப்போகின்றார்கள்' என்று ஒரு விடயத்தை உறுதியாகக் கூறியிருகின்றார்கள்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது கடந்த சனிக்கிழமை 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
இந்நிலையில் 'இஸ்ரேலியர்கள் உண்மையான நரகத்தைப் பார்க்கப்போகின்றார்கள்' என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்திருந்தார்கள்.
இனி வரும் நாட்களில் இஸ்ரேலின் நகர்வுகள் பற்றியும், இஸ்ரேலுக்கு இருக்கின்ற சவால்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |