22 வருடமாக கோமா வாழ்க்கை: 53 வயதில் உயிரிழந்த பெண்மணியின் பின்னணி
ஜெருசலேம் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இஸ்ரேல் பெண் 22 வருடங்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.
தீவிரவாத தாக்குதல்
ஹனா நாச்சன்பெர்க்(Hana Nachenberg) என்ற 31 வயது பெண் தன்னுடைய 3 வயது மகளுடன் இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள பீட்ஸா உணவகத்தில் இருந்த போது நடத்தப்பட்ட பாலஸ்தீன தற்கொலை குண்டுதாரி தாக்குதலில் பாதிக்கப்பட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
MODIIN NEWS
அத்துடன் 120 பேர் படுகாயமடைந்தனர், இதில் அதிர்ஷ்டவசமாக நாச்சன்பெர்க்-கின் மகள் பாதிப்பு எதுவும் இல்லாமல் உயிர் தப்பினார்.
ஆனால் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஹனா நாச்சன்பெர்க் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழப்பு
தாக்குதலுக்கு பிறகு கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஹனா நாச்சன்பெர்க், நேற்று டெல் அவிவ்-வில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது தந்தை பேசிய போது, 22 வருட வீரமான போராட்டத்திற்கு பிறகு நாச்சன்பெர்க் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Sky news
தாக்குதலுக்கு பிறகு நாச்சன்பெர்க் கோமா நிலையில் இருந்து மீளவில்லை என்றும், அடுத்த மாதம் அவர் 53 வயதை கடக்கவுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
இந்த தற்கொலை குண்டுதாரி தாக்குதலுக்கு காரணமான குற்றவாளி அஹ்லாம் தமிமி(Ahlam Tamimi) கைது செய்யப்பட்டார்.
ஆனால் 2011 ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் அவர் ஜோர்டனிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.