லெபனான் போர்நிறுத்தம்: ட்ரம்ப் அறிவித்த பிறகும் படைகளை நிலைநிறுத்தும் இஸ்ரேல்
லெபனானில் 10 நாள் போர்நிறுத்தம் இன்று அமுலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் தனது பாதுகாப்பு படைகளை தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்த 10 நாள் போர்நிறுத்ததின் போது, இஸ்ரேலின் படைகள் தெற்கு லெபனானில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட காணொளி உரையில், "நாங்கள் 10 கிலோமீற்றர் பாதுகாப்பு வளையத்தில் தொடர்ந்து இருப்போம். இது எங்கள் சமூகங்களில் ஊடுருவல் மற்றும் ஏவுகணை தாக்குதலைத் தடுக்க உதவும். நாங்கள் வெளியேற மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவிடமிருந்து முழுமையாக ஆயுதங்கள் கைப்பற்றப்படவேண்டும் மற்றும் நிலையான அமைதி ஒப்பந்தம் செய்யப்படவேண்டும் என இரண்டு முக்கிய கோரிக்கைகளை நெதன்யாகு முன்வைத்துள்ளார்.

அதேசமயம், இஸ்ரேல்-லெபனான் இடையே 44 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவுன், நெதன்யாகுவுடன் தொலைபேசி உரையாடலை தவிர்த்திருந்தாலும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போர்நிறுத்தம், எல்லைப் பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை குறைத்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்க உதவும் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Israel Lebanon ceasefire 2026, Netanyahu Lebanon security zone, Hezbollah disarmament talks, Trump Israel Lebanon peace deal, Middle East ceasefire news, US diplomacy in Lebanon, Israel border tensions #IsraelLebanon #Ceasefire #Netanyahu #MiddleEastPeace #TrumpDiplomacy #Hezbollah #GlobalPolitics #LebanonCrisis