பாலஸ்தீன மக்களுக்கு பதிலாக ஆசிய நாடொன்றின் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் இஸ்ரேல்
ஹமாஸ் படைகள் தாக்குதல் முன்னெடுத்ததன் பின்னர் பாலஸ்தீன மக்களை வேலையில் இருந்து நீக்கியுள்ள இஸ்ரேல் தற்போது இந்தியர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பை அளித்துள்ளது.
கட்டுமான பணியிடங்களில்
ஹமாஸ் தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றால், தற்போது கட்டுமான பணியிடங்களில் அரேபிய மொழி பேசும் தொழிலாளர்களே நிர்ம்பியிருப்பார்கள். ஆனால் தற்போது இந்தி, ஹீப்ரு மற்றும் சீன மொழி பேசும் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
ஹமாஸ் படைகளின் தாக்குதலானது இஸ்ரேலுக்கும் காசா பகுதியில் ஹமாஸ் படைகளுக்கும் இடையே இதுவரை இல்லாத பயங்கரமான போரைத் தூண்டியது.
அது பின்னர் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் யேமனில் உள்ள ஹூதிகள் உட்பட ஈரான் ஆதரவு பெற்ற பிற குழுக்களையும் உள்ளடக்கிய மோதலாக வெடித்தது, அத்துடன் இஸ்லாமிய குடியரசையே நேரடியாக மோதவும் செய்தது.
இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தற்போதைய சூழலில் அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்கள் தங்கள் நாட்டில் பெறுவதைவிட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் பெறுகின்றனர்.
இந்தியாவில் இருந்து மட்டும் கடந்த ஓராண்டில் 16,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட வேகமாக வளரும் நாடுகளில் ஒன்று. ஆனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு போதுமான முழுநேர வேலைகளை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் போராடி வருகிறது.
80,000 பாலஸ்தீன மக்கள்
இஸ்ரேலில் பல தசாப்தங்களாக இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலும், ஆயிரக்கணக்கானோர் காப்பகங்களிலும், சிலர் வைர வியாபாரிகளாகவும் மென்பொருள் துறையிலும் பணியாற்றி வந்துள்ளனர்.
ஆனால் போர் மூண்டதன் பின்னர் கட்டுமான வேலைவாய்ப்பிலும் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் மட்டும் 3,500 கட்டுமான தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மொத்தமாக 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டமிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னர் சுமார் 80,000 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுடன் 26,000 வெளிநாட்டவர்களும் பணியாற்றியுள்ளனர். ஆனால் தற்போது 30,000 வெளிநாட்டவர்கள் மட்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |