சிரியா மீது 48 மணி நேரத்தில் 350க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்: கடற்படை தளங்களை அழித்த இஸ்ரேல்
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் வான் தாக்குதலில் சிரிய கடற்படை தளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை முன்னேறியதை அடுத்து ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(Bashar al Assad) சிரியாவை விட்டு விமானம் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து சிரியாவின் கட்டுப்பாடானது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் சிரிய ராணுவத்தின் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்து விடாமல் இருப்பதற்காக அண்டை நாடான இஸ்ரேல் சிரியாவின் இராணுவ தளங்கள் மீது வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமையன்று சிரியா முழுவதும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
மேலும் இஸ்ரேலிய தரைப்படைகள் சிரிய நிலப்பரப்பிற்குள் நுழைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், இஸ்ரேல் ராணுவம் சிரியக் கடற்படையை வெற்றிகரமாக அழித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.
350க்கும் மேற்பட்ட தாக்குதல்
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சிரிய பகுதியில் 350க்கும் மேற்பட்ட நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், டமாஸ்கஸ் மற்றும் பிற நகரங்களில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், இராணுவ விமான நிலையங்கள், ஏவுகணை கிடங்குகள் மற்றும் ஆயுத உற்பத்தித் தளங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகளை குறி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களின் நோக்கம், முன்னேறிய ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்கள் குழுக்களின் கைகளில் விழாமல் தடுப்பதாகும் என இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |