தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மேலும் 2 முக்கிய தளபதிகளை இழந்த ஹாமஸ் படை
ஹமாஸ் அமைப்பின் மேலும் 2 தளபதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இஸ்ரேலிய எல்லை கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹாமஸ் அமைப்பினரின் படை தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியின் உளவுத்துறை வழங்கிய தகவலில், ஞாயிற்றுக்கிழமை நிரிம் மற்றும் நிர் ஓஸ் என்ற 2 கிராமங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் நுக்பா பிரிவின் தெற்கு கான் யூனிஸ் பட்டாலியனின் தளபதி பிலால் அல்-கெத்ரா கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்து இருந்தது.
கொல்லப்பட்ட மற்றொரு தளபதி
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் மேலும் 2 தளபதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Israel Defense Forces eliminated Muhammad Alwadia, commander of the Hamas terrorists' anti-tank missile system in Gaza City, as well as arms dealer and coordinator of attacks on Israel Akram Hijaz. pic.twitter.com/f7K9Mz0fl2
— NEXTA (@nexta_tv) October 18, 2023
இதன்படி வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் தளபதி முஹம்மது அல்வாடியா மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல் ஒருங்கிணைப்பாளர் அக்ரம் ஹிஜாஸ் ஆகியோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |