சரணடைய முயன்ற 2 பாலஸ்தீன ஆண்கள்: சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: வீடியோ
சரணடைய முயன்ற 2 பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்று இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சரணடைய முயன்ற 2 பாலஸ்தீனியர்கள்
மேற்கு கரை நகரான ஜெனினில்(Jenin) சரணடைய முயன்ற 2 பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய படைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அரபு தொலைக்காட்சிகளில் வெளியான இந்த காட்சிகளை தொடர்ந்து, இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைக்கு எதிராக பாலஸ்தீன அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன அதிகாரிகள் இந்த சம்பவத்தை அதிர்ச்சியூட்டும் படுகொலை என விவரித்துள்ளனர்.
என்ன நடந்தது?
ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளில், ஜெனினில் உள்ள கட்டிடத்தில் இருந்து இரண்டு ஆண்கள் வெளியேறி இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் முன் தரையில் படுத்துள்ளனர்.
அவர்கள் தங்கள் டி-சர்ட் மற்றும் கைகளை உயர தூக்கி நிராயுதபாணியாக இருப்பதை சுட்டிகாட்ட முயற்சித்தனர்.
இதையடுத்து, இஸ்ரேலிய வீரர்கள் அந்த ஆண்கள் இருவரையும் கட்டிடத்திற்குள் செல்லுமாறு கட்டளையிட்டதாக தெரிகிறது.
அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் சரணடைய முயன்ற இரண்டு ஆண்களையும் இஸ்ரேலிய படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |