எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம்: பிரான்ஸ் ஜனாதிபதியின் விருப்பத்தை நிராகரித்த நாடு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது விருப்பத்தை இஸ்ரேல் பிரதமர் நிராகரித்துள்ளார்.
எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம்
ஐ.நா பொதுச்சபை துவக்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சிகளுக்கு முன் ஒரு முறை இஸ்ரேலுக்கு விஜயம் செய்வது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மேக்ரான் இஸ்ரேல் நாட்டுக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது விருப்பத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
பிரான்ஸ் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இருப்பதாக அறிவித்தத்தைத் தொடர்ந்து பிரான்சுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.
ஆக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் திட்டம் பிரான்சுக்கு இருக்கும் வரையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு இஸ்ரேலில் வரவேற்பில்லை என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரான Gideon Sa’ar கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Noel Barrotஉடனான தொலைபேசி உரையாடலின்போது இந்த விடயத்தை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரான Gideon Sa’ar தெரிவித்ததாக, இஸ்ரேல் வெளியுறவு அலுவலக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |