காஸா மீது அணுகுண்டு வீச வேண்டும்... அமைச்சரின் கருத்துக்கு உடனடியாக பிரதமர் நெதன்யாகு நடவடிக்கை
காஸா மீது அணுகுண்டு வீசுவதே தீர்வு என விவாத கருத்தை முன்வைத்த இஸ்ரேலிய அமைச்சர் மீது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக நடவடிக்கை
காஸா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை தீவிரவாமாக முன்னெடுத்துவரும் நிலையில், அமைச்சர் Amichai Eliyahu-வின் கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
@reuters
இந்த நிலையில், அமைச்சரின் கருத்து உண்மை நிலையில் இருந்து மாறுபட்டிருப்பதாக குறிப்பிட்டு, இடைநீக்கம் செய்துள்ளார் பிரதமர் நெதன்யாகு.
மேலும், இஸ்ரேல் மற்றும் ஐடிஎஃப் ஆகியவை அப்பாவி பொது மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்காக சர்வதேச சட்டத்தின் மிக உயர்ந்த தரத்தின்படி செயல்படுவதாகவும், வெற்றியை எட்டும் வரையில் அது தொடரும் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
@reuters
காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுக்கும் போரில் அணுகுண்டு வீசுவது ஒரு முடிவாக இருக்கும் என்றார் அமைச்சர் Amichai Eliyahu. இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ், அமைச்சரின் கருத்து நெதன்யாகு அரசாங்கத்தின் வெளிப்படையான பயங்கரவாதத்தை பிரதிபலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
@reuters
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |