காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்., 57 பேர் மரணம்
காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (செவ்வாய்கிழமை) வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாக்வும் தகவல்கள் தெறிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட பாடசாலை, அகதிகள் தங்க வைக்கப்பட்ட ஐ.நா. அமைப்பிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
கடந்த 15 நாட்களில் நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலை காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளது.
கடந்த வாரம் தான் கான் யூனிஸை காலி செய்யும்படி பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அங்குள்ள மூன்று பெரிய மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) இது ஒரு ஆபத்தான நடவடிக்கை என்று கூறியுள்ளது. கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேற்ற கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இஸ்ரேல் அகதிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. காசாவில் உள்ள பாடசாலைகள் மீது மூன்று தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஜூன் 6 அன்று அறிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Israel Defence Force strikes over Gaza School hospital, Gaza Strip, Israel Hamas war, Israel Palestine war Updates