21 நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையிலான போரில் இதுவரை 8,500 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
கடந்த 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் 21வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹமாஸ் படையினர் முதலில் தொடங்கி இருந்தாலும், இஸ்ரேலின் தற்காப்பு மற்றும் பதிலடி தாக்குதலால் ஹமாஸ் படையினரே அதிகப்படியான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நடத்திய தாக்குதலில் இதுவரை 7,028 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த சண்டையில் 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Satellite images reveal the extent of destruction in Gaza done by Israeli strikes. Since the October 7 Hamas attack on Israel, the Israeli military has been bombarding the strip. pic.twitter.com/CBdKwzcqCQ
— DW News (@dwnews) October 27, 2023
வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் 8,540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |