காஸா போருக்கு காரணமான ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்: உண்மையை வெளியிட்ட இஸ்ரேல்
காஸா போருக்கு காரணமான ஹமாஸ் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 378 என இஸ்ரேல் இராணுவம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம்
கடந்த 2023, அக்டோபர் 7ம் திகதி காஸா எல்லையில் நோவா இசை விழாவின் போதே ஹமாஸ் படைகள் அதிரடியாக துப்பாக்கிச் சூடு தாக்குதலை முன்னெடுத்தனர். இதில் 1,218 பேர்கள் கொல்லப்பட்டதாகவும், பெரும்பாலும் இஸ்ரேலிய பொதுமக்கள் என்றே அப்போது கூறப்பட்டது.
அத்துடன், 251 பேர்களை ஹமாஸ் படைகள் கடத்தியுள்ளனர். அதில் 58 பேர்கள் தற்போதும் காஸாவில் பணயக்கைதிகளாக உள்ளனர். இஸ்ரேல் இரணுவ நடவடிக்கைகளால் 34 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் மற்றும் உயிர் தப்பியவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
சம்பவத்தன்று காஸா எல்லையிலிருந்து மூன்று மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ள ரீமில் நடந்த டெக்னோ இசை விழாவில் சுமார் 3,400 பேர் கலந்து கொண்டனர்.
ஹமாஸ் படைகள் ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்த 6 நிமிடங்களுக்கு பிறகு இசை விழாவினை முடித்துக்கொள்ள இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் தப்பித்துள்ளனர்.
378 பேர்கள் மட்டுமே
பகல் 8.20 மணிக்கு சம்பவயிடத்தில் 110 ஹமாஸ் வீரர்கள் குவிந்துள்ளனர். உண்மையில் இசை விழாவில் தாக்குதல் நடத்தும் திட்டமேதும் ஹமாஸ் படைகளுக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால் நெட்டிவோட்டுக்குச் செல்லும் வழியில் அவர்கள் வழி தவறிவிட்டனர்.
இசை விழாவில் கலந்துகொண்டவர்களை மீட்க 11.20 மணிக்கு இஸ்ரேல் இராணுவம் களமிறங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இராணுவ அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதாகவும், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
ஹமாஸ் படைகளின் தாக்குதலில் 344 பொதுமக்கள் உட்பட 378 பேர்கள் மட்டுமே அக்டோபர் 7ம் திகதி கொல்லப்பட்டுள்ளனர். இசை விழா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் மீதான தாக்குதலின் போது, ஹமாஸ் படைகள் 44 பேரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அதில் பதினேழு பேர்கள் காஸாவில் பணயக்கைதியாக உள்ளனர், 11 பேர் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது. அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 50,523. இதில் பெரும்பாலானோர், சிறார், பெண்கள் என பொதுமக்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |