அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி வரியை ரத்து செய்த நெதன்யாகு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரிகளை ரத்து செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இறக்குமதி வரி
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, பல நாடுகளுக்கு வரி விதிப்புகளை அமுல்படுத்தி வருகிறார்.
அதேசமயம் அமெரிக்க தயாரிப்பு கார்களுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு வரிகளை குறைத்துள்ளது; இதனால் 2.5 சதவீதம் என்ற அளவில் வரிகள் இருக்கும் என்று தெரிவித்தார்.
ட்ரம்பின் வரி விதிப்பு இடையே, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஆகியன அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்துள்ளதாக செய்தி வெளியானது.
ரத்து செய்த இஸ்ரேல்
இந்த நிலையில் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நிதி அமைச்சர் பிஜாலெல் ஸ்மோத்ரிச் மற்றும் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் உத்தரவின்பேரில், அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளும் ரத்து செய்யப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் நிதிக்குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |