ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 3 பேர் உடல் மீட்பு: காசாவில் இரவு நேர வேட்டை
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 3 பேரின் உடலை இஸ்ரேலிய பாதுகாப்பு படை காசாவில் இருந்து மீட்டுள்ளது.
கடத்தப்பட்ட நபர்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை முன்னெடுத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250 பேர் கடத்தப்பட்டனர்.
அப்போது நோவா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த இட்சாக் கெலரென்டர், அமித் புஸ்கிலா மற்றும் ஷானி லூக் ஆகிய 3 பேர் ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களது உடல் காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஷானி லூக் என்ற 22 வயது பெண்மணியின் உடலை ஹமாஸ் அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்ற வீடியோ அப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது..
உடல்கள் மீட்பு
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட கெலரென்டர், அமித் புஸ்கிலா மற்றும் ஷானி லூக் ஆகிய 3 பேரின் உடல்கள் காசாவில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலின் இராணுவ செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்த தகவலில், இஸ்ரேலிய பாதுகாப்பு படையும், ஷின் பெட் இணைந்து நடத்திய திடீர் இரவு நேர வேட்டையில் கடத்தப்பட்ட 3 பேர் எச்சங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |