ட்ரம்பின் நகர்வுகளை உளவு பார்த்த இஸ்ரேல்... அதிர்ச்சி தெரிவித்த அமெரிக்க உளவுத்துறை

Benjamin Netanyahu Donald Trump Israel
By Arbin Jun 07, 2026 04:37 PM GMT
Report

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை கவலை எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உளவு அமைப்புகள்

அமெரிக்கா, ஈரானுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதோடு, மத்திய கிழக்கில் இஸ்ரேலுடனான தனது நீண்டகால உத்திசார் மற்றும் இராணுவக் கூட்டாண்மையையும் பேணிவரும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் இந்த அறிக்கைகள் வந்துள்ளன.

ட்ரம்பின் நகர்வுகளை உளவு பார்த்த இஸ்ரேல்... அதிர்ச்சி தெரிவித்த அமெரிக்க உளவுத்துறை | Israel Spying On Trump

காஸா விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து ஹமாஸ் தலைவர்களையும் பல காரணங்களால் இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில்,

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளும் நோக்கில், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் தங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதில் மூத்த அமெரிக்க அதிகாரிகள், Steve Witkoff, Elbridge A. Colby, Michael P DiMino IV உள்ளிட்டவர்களை இஸ்ரேல் உளவு அமைப்புகள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததாக வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக உளவுத் தகவல்களைச் சேகரித்து வருகின்றன என்பது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகவே தெரியும். ஆனால் தற்போது இஸ்ரேலின் இந்த முயற்சிகள் வரம்புகளை மீறிவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம்

அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம்

மேலும், இஸ்ரேலின் இந்த நகர்வுகளை அமெரிக்க உளவுத்துறை அந்த அறிக்கையில் உயர் நிலை அச்சுறுத்தலில் இருந்து அபாயகரமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளைக் கண்காணிக்க முயன்றதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் விசாரிக்கப்பட்டதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரின் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் மென்பொருள், அவர்களது கைபேசிகளில் நிறுவப்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்ததும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானுடனான பதற்றம் அதிகரித்ததிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியது. மட்டுமின்றி, இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் (US Central Command) வாயிலாக நெருக்கமாகப் பணியாற்றுவதுடன், பல்வேறு செயல்பாட்டு மற்றும் உத்திசார் விவகாரங்கள் குறித்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர்.

கூடுதல் கட்டுப்பாடு

மேலும், இஸ்ரேலின் நகர்வுகள் போர்க்கள உளவு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அம்பலமாகியுள்ள இப்பிரச்சனை, இவ்விரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உளவுத்துறைப் பகிர்வு ஏற்பாடுகளைச் சிக்கலாக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.

ட்ரம்பின் நகர்வுகளை உளவு பார்த்த இஸ்ரேல்... அதிர்ச்சி தெரிவித்த அமெரிக்க உளவுத்துறை | Israel Spying On Trump

மேலும், இஸ்ரேலியத் தரப்பினருக்கு அணுகக்கூடிய தகவல்களின் வகைகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பென்டகன் பரிசீலிக்கக்கூடும் என்றும் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானுடன் ஒரு பேச்சுவார்த்தை மூலம் சாதகமான தீர்வை எட்டும் முயற்சியை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதே வேளையில், ஈரானை ஒடுக்கி அந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு கடுமையான அணுகுமுறையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி வந்ததே அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, வெள்ளை மாளிகை அதிகாரிகளும் இஸ்ரேல் தரப்பும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US