சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் இஸ்ரேல்: சொல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
இஸ்ரேல் பிரதமர் தமது கடும்போக்கு நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களை அமைதிப்படுத்த
பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கம் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
ஜோ பைடனின் இந்த கருத்தானது பல ஆயிரம் அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்ட காசாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்பில் அமெரிக்காவில் அதிகரிக்கும் எதிர்ப்பின் அடையாளமாகவே பார்க்கப்படுகிரது.
மட்டுமின்றி, அமெரிக்காவில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அமெரிக்க இஸ்லாமிய மக்களை அமைதிப்படுத்தும் நோக்கமாகவும் கருதப்படுகிறது. 2024 மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றில் பேசிய ஜோ பைடன்,
இஸ்ரேல் தனக்கான சர்வதேச ஆதரவை இழந்து வருகிறது என்றார். பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய போர் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலுக்கு செல்ல தயாராகி வரும் நிலையிலேயே ஜனாதிபதி ஜோ பைடனின் கடுமையான கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
நாட்டை முறையாக வழிநடத்தவில்லை
ஆனால், ஹமாஸ் படைகளை ஒழிப்பதிலும் பணயக்கைதிகளை மீட்பதிலும் அமெரிக்காவின் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir-ஐ குறிப்பிட்டு பேசிய ஜோ பைடன், இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் அடிப்படைவாத அரசாங்கம் இது என்றார்.
@getty
பிரதமர் நெதன்யாகு இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றும், இஸ்ரேலில் ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் நாட்டை முறையாக வழிநடத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அக்டோபர் 7 ம் திகதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்கர்களின் குடும்ப உறுப்பினர்களை புதன்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திக்க ஜனாதிபதி பைடன் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |