மிக ஆபத்தான பகுதி... பாலஸ்தீன மக்கள் திரும்ப வேண்டாம்: எச்சரித்த இஸ்ரேல்
காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்கள் வடக்குப் பகுதிக்குத் திரும்ப வேண்டாம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிகவும் ஆபத்தானது
வாடி காஸாவின் வடக்கே உள்ள பகுதி இன்னும் ஆபத்தான போர் மண்டலமாகக் கருதப்படுகிறது என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவிச்சி அத்ரே தெரிவிக்கையில்,
காஸா நகரைச் சுற்றி IDF படைகள் இன்னும் உள்ளன, அங்கு திரும்பிச் செல்வது மிகவும் ஆபத்தானது என தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, வடக்கு நோக்கித் திரும்புவதையோ அல்லது IDF படைகள் நிறுத்தப்பட்டு செயல்படும் பகுதிகளை அணுகுவதையோ தவிர்க்கவும்.
காஸாவின் தெற்கு மற்றும் கிழக்கில் உட்பட உத்தியோகப்பூர்வ அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் வரை எவரும் திரும்ப வேண்டாம் என்றும் அத்ரே குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும் ஹமாஸும் வியாழக்கிழமை காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ள நிலையில், எஞ்சியுள்ள உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளை சில நாட்களுக்குள் விடுவிக்கப்படும் நிலையில் அவிச்சி அத்ரேவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
காஸா மக்களுக்கு
ஆனால், இஸ்ரேல் இராணுவத்தால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள பகுதியில், பாலஸ்தீன மக்கள் திரும்ப வாய்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், திடீரென்று பாலஸ்தீன மக்களுக்கு தடை போடுவதன் பின்னணியும் மர்மமாகவே உள்ளது என குறிப்பிடுகின்றனர்.
சமாதான ஒப்பந்தத்தின் முதற்கட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். அத்துடன் எஞ்சியுள்ள காஸா மக்களுக்கு உணவு மற்றும் உதவிகளும் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதனிடையே, போர் நிறுத்த அறிவிப்பு வெளியானபோதிலும், வியாழக்கிழமை காலை காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக அப்பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |