ஹமாஸ் தலைவர் வீட்டை குண்டு வீசி அழித்த இஸ்ரேல் படையினர்: வெளியாகியுள்ள காட்சிகள்
ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவருடைய வீட்டை இஸ்ரேல் படையினர் தாக்கி அழைத்துள்ளனர். அது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் முக்கியமான ஒருவர்
காசாவில் அமைந்துள்ள, ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் இஸ்மாயில் ஹனியே (smail Haniyeh) என்பவரது வீட்டைத்தான் இஸ்ரேல் படையினர் தாக்கியுள்ளனர்.
חטיבת האש 215 באוגדה 162 תקפה הלילה באמצעות מטוסי קרב את ביתו של איסמעיל הנייה, ראש הלשכה המדינית של ארגון הטרור חמאס ששימש כתשתית טרור ובין היתר כמקום מפגש עבור בכירי הארגון>> pic.twitter.com/eCwd4lmrFF
— צבא ההגנה לישראל (@idfonline) November 16, 2023
இஸ்மாயில் வீட்டில் போர் விமானங்கள் குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பகிர்ந்துள்ளன. இந்த வீடு பயங்கரவாத உள்கட்டமைப்பு என்றும், ஹமாஸின் மூத்த தலைவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிடுவதற்காக சந்திக்கும் இடமாக அது பயன்படுத்தப்பட்டுவந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்மாயில், 2017ஆம் ஆண்டு ஹமாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹமாஸின் அரசியல் நடவடிக்கைகளை அவர் காசாவுக்கு வெளியிலிருந்தவண்ணமே பெருமளவில் அவர் கட்டுப்படுத்திவந்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |