பல நாடுகளில் பரவும் போர்.! சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் - காசா போர் மேலும் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. சிரியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸுக்கு ஆதரவாக இருக்கும் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் போர் ஆறாவது நாளாக நீடித்து வரும் நிலையில் சிரியா மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன.
சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது இஸ்ரேலியப் படைகள் ஒரே நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை வியாழன் அன்று நடத்தியதாகவும், ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு மையங்களையும் சேவையில் இருந்து நீக்கியதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.
உலகின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில்..
காசாவில் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் நடத்தும் போரில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில், ஒரே நேரத்தில் இரண்டு விமான நிலையங்களையும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதாக அரசு செய்தி நிறுவனமான SANA சிரிய இராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி கூறியது.
இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் உண்டா? என்ற விவரம் வெளியாகவில்லை. அனால் இரண்டு விமான நிலையங்களையும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் மூலோபாயமாக தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா மீது பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
அலெப்போ மற்றும் டமாஸ்கஸ் விமான நிலையங்கள் உட்பட, சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் என்று விவரித்ததற்கு எதிராக இஸ்ரேல் பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
2011-ல் தொடங்கிய உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை ஆதரிக்கத் தொடங்கியதிலிருந்து ஈரானின் செல்வாக்கு அதிகரித்துள்ள சிரியாவிற்கான ஈரானிய விநியோக வழிகளை சீர்குலைக்கும் நோக்கில் விமான நிலையங்கள் மீதான தாக்குதல் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் சிரியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இன்று (வியாழன்) தாக்குதல்கள் நபிடந்துள்ளன.
சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்!
சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினரின் தாக்குதல்களை ஈரான் கொண்டாடியது, ஆனால் ஈரான் இந்த தாக்குதலில் ஹமாஸ் குழுவிற்கு பின்னல் தாங்கள் இல்லை என்று மறுத்தது.
முன்னதாக செவ்வாயன்று, தெற்கு சிரியாவிலிருந்து ராக்கெட்டுகள் எல்லைக்கு அப்பால் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கியதை அடுத்து, இஸ்ரேலிய துருப்புக்கள் சிரியாவை நோக்கி பீரங்கி மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியாது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel, Palestine, Lebanon, Syria, Israel Hamas War, Israel Attacks Syria, Syria and Lebanon attacks Israel, war expands to more countries, Israeli attacks on airports in Syria