18 வயது பாலஸ்தீனிய சிறுவனை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: 3 பேர் கைது
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய சோதனையின் போது பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவன்
வெள்ளிக்கிழமை காலை வெஸ்ட் பேங்கின் துல்கரேம் பகுதியில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
அப்போது மஹ்மூத் அபு சான் என்ற 18 வயது பாலஸ்தீன சிறுவனை இஸ்ரேல் ராணுவம் தலையில் சுட்டுக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Reuters
இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சிறுவன் அபு சானை சுட்டு தரையில் வீழ்த்தியதாக சாட்சியாளர் ஒருவர் பாலஸ்தீனிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுவன் கையில் எத்தகைய தாக்குதல் ஆயுதங்களும் வைத்து இருக்க வில்லை என்றும், அவர் எத்தகைய ராணுவ மோதல்களிலும் ஈடுபடவில்லை, இருப்பினும் அவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அல்-அக்ஸா தியாகிகள் படையணி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
AFP
மூன்று பேர் கைது
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த சோதனையின் போது மேம்படுத்தப்பட்ட வெடிப் பொருட்களை பயன்படுத்திய மூன்று பலஸ்தீனியர்கள் சோதனையின் போது கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |