உணவு தேடி வந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்! சிறுவர்கள், பெண்கள் என 74 உயிரிழந்த பரிதாபம்
காஸாவில் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
உணவு தேடி
இஸ்ரேல் மீண்டும் காஸாவை குறிவைத்துள்ளது. பாலஸ்தீனியர்களை உடனடியாக வடக்கு காஸாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் காஸாவில் உணவகம் மற்றும் உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த கொடூர தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 74 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடலோர ஹொட்டல் ஒன்றில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள், தங்களுக்கு தேவையான உணவு உதவியைப் பெற முயன்றபோது, துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |