போர் நிறுத்தம் தொடங்கும் முன்பே சிலவற்றை அழித்துள்ளோம் - இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர்
போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு பல சுரங்கப்பாதைகள் இடிக்கப்படும் என்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்திடம் அமுல்படுத்தப்பட்டது. நான்கு நாட்கள் போர்நிறுத்தத்தின்படி முதற்கட்டமாக ஹமாஸ் 13 பணய கைதிகளை விடுத்தது.
அதேபோல் இஸ்ரேல் 24 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இவர்கள் இஸ்ரேல் வீரர்கள் தாக்கியதாகவும், கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காசா குடிமக்கள் Stripயின் வடக்குப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்ப IDF அனுமதிக்காது என இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
Avshalom Sassoni/Flash90
மேலும் அவர் கூறுகையில், 'இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் இராணுவ சொத்துக்களை கைப்பற்றியுள்ளது. போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமான சண்டையைத் தொடர திட்டமிட்டுள்ளது. இன்னும் பல இலக்குகள் மற்றும் பல சுரங்கப்பாதைகள் தகர்க்கப்பட உள்ளன, அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே இன்று (நேற்று) காலையில் கூட அழித்துவிட்டோம்' என தெரிவித்துள்ளார்.
Atia Mohammed/Flash90
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |