இஸ்ரேல் காசா எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்: முழு வீச்சில் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம்
இன்று காலை, காசாவை ஒட்டியுள்ள இஸ்ரேல் எல்லைப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், இஸ்ரேல், காசாவுக்குள் தரைவழித்தாக்குதலை நிகழ்த்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
வெளியாகியுள்ள புகைப்படங்கள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காசா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், காசாவிலிருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் ராணுவம் தரைவழித்தாக்குதலில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகின.
Credit: Reuters
இந்நிலையில், இன்று காலை, காசாவை ஒட்டியுள்ள இஸ்ரேல் எல்லையில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லையில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
வீரர்களை சந்தித்த பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்
எல்லையில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களை, பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவும், பாதுகாப்புத்துறை அமைச்சரான Yoav Gallantம் சந்தித்துள்ளனர்.
Credit: Reuters
அப்போது வீரர்களிடையே உரையாற்றிய Yoav Gallant, இவ்வளவு நாட்களும் நீங்கள் காசாவை வெளியிலிருந்துதான் பார்த்திருக்கிறீர்கள், இனி, காசாவுக்குள்ளிருந்தே அதைப் பார்ப்பீர்கள் என்று கூறினார்.
Credit: Avalon.red
ஹமாஸ் தாக்குதலுக்கு மன்னிப்பே கிடையாது, ஹமாஸ், அந்த பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் அந்த பயங்கரவாதிகள், அவர்களை அனுப்பியவர்கள் என அனைவரையும் அழித்தொழிக்கவேண்டும்.
அதற்கு, ஒரு வாரம் ஆனாலும் சரி, ஒரு மாதம் ஆனாலும் சரி, இரண்டு மாதங்கள் ஆனாலும் சரி, அவர்களை முற்றிலுமாக ஒழித்தேயாகவேண்டும் என்றார் அவர்.
Credit: EPA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |