காசாவில் வாழும் பொதுமக்களுக்கு மீண்டும் கெடு விதித்த இஸ்ரேல் ராணுவம்
காசாவில் வாழும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற, இஸ்ரேல் மீண்டும் கெடு விதித்துள்ளது. இம்முறை, ஆறு மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், காசா பகுதியின் வடக்கில் வாழும் பொதுமக்களை, உள்ளூர் நேரப்படி காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் தெற்கு நோக்கி நகருமாறு உத்தரவிட்டுள்ளன. அவர்கள் எந்த ஆபத்துமின்றி இடம்பெயரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் தரைவழி ஊடுருவலுக்காக ஆயத்தமாகிவரும் நிலையில், காசா பகுதியின் தெற்கே தப்பிச் செல்லும்படி நேற்றே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
כלי טיס של חיל-אוויר, בהכוונה מודיעינית של שב"כ ואמ"ן, חיסלו את עלי קאצ'י, מפקד בכוח הנח'בה של ארגון הטרור חמאס, שהוביל מתקפת טרור ביישובי עוטף עזה בסוף השבוע האחרון. בשנת 2005 עלי נעצר בעקבות חטיפה ורצח של ישראלים והוחזר כחלק מעסקת גלעד שליט. pic.twitter.com/BpfqdxEUeT
— Israeli Air Force (@IAFsite) October 14, 2023
இந்நிலையில், இன்று, பொதுமக்கள் வெளியேற மீண்டும் ஆறு மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வடக்கு காசாவிலுள்ள மருத்துவமனைகள் தங்களிடம் உயிருக்குப் போராடும் நோயாளிகள் உள்ளதால், தங்களால் அவர்களை வெளியேற்ற முடியாது என எச்சரித்துள்ளன.
CREDIT: AP Photo/Hatem Moussa