இத்தாலி முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் காயம்
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 80 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
முதியோர் இல்லத்தில் தீ விபத்து
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களை சேதப்படுத்துவதற்கு முன்னதாக முழுவதும் அணைக்கப்பட்டது, இருப்பினும் கட்டிடம் முழுவதும் நச்சு வாயுக்கள் பரவியது.
Reuters
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் நச்சுப்புகை தாக்கி உயிரிழந்து இருப்பதாக மிலன் நகர மேயர் கியூசெப் சாலா தகவல் தெரிவித்துள்ளார்.
80 பேர் வரை பாதிப்பு
முதியோர் இல்லத்தில் மொத்தமாக 167 பேர் இருந்த நிலையில் இது இன்னும் மோசமாக ஆகி இருக்கலாம் என்றும், 6 பேர் உயிரிழந்து இருப்பது மிகவும் கடுமையான எண்ணிக்கை என்றும் மேயர் சாலா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இந்த கோர சம்பவம் பெரும்பாலும் எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் லுகா காரி தெரிவித்துள்ளார்.
Reuters
அத்துடன் சக்கர நாற்காலி இருந்தவர்கள் உட்பட 80 பேரை பத்திரமாக மீட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 80 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிகமான கரும்புகை கட்டிடத்தை சூழ்ந்து இருப்பதால் மீட்பு நடவடிக்கை மிகவும் சிரமமாக இருந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Twitter
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |