சீனாவில் இருந்து வருபவர்களை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தும் ஐரோப்பிய நாடு!
சீனாவில் கோவிட் மீண்டும் வேகமெடுப்பதால், தங்கள் நாட்டிற்கு சீனாவில் இருந்து வருபவர்களை இத்தாலி கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகிறது.
50 சதவீதம் பயணிகளுக்கு கோவிட்
இத்தாலியின் மிலன் நகருக்கு சீனாவில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் பயணித்தவர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது 50 சதவீதம் பேர் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்தது. முதல் விமானத்தில் பயணித்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 62 பயணிகளில் 35 பேரும், இரண்டாவது விமானத்தில் 120 பேரில் 62 பேரும் கோவிட்டினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் இனி சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய பரிசோதனை நடத்த வேண்டும் என இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.
அமைச்சரின் உத்தரவு
இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஒராசியோ ஷிலாசி கூறுகையில், 'சீனாவில் இருந்து வரும் மற்றும் இத்தாலி வழியாக செல்லும் அனைத்து பயணிகளுக்கும் கோவிட் - 19 Antigenic swabs மற்றும் வைரஸ் தொடர்புடைய வரிசைமுறைகளை சோதனை செய்வதை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளேன்.
இத்தாலிய மக்களைப் பாதுகாப்பதற்காக வைரஸின் ஏதேனும் மாறுபாடுகள் கண்காணிப்பு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம்' என தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை கொண்டுவரப்படுவதற்கு ஒருநாள் முன்பாக, லோம்பார்டியின் வடக்குப் பகுதியில் திரையிடல் அறிமுகப்படுத்தப்பட்டது.