காதலியை 57 முறை குத்திக் கொன்ற நபர்: சிறையில் உடல் எடை அதிகரித்தால் விடுவிப்பு
சிறையில் கைதி ஒருவரின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றதை தொடர்ந்து அவரை வெளியே அனுப்புமாறு இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதலிக்கு 57 முறை கத்திக்குத்து
இத்தாலியில் கடந்த 2017ம் ஆண்டு திமித்ரி ஃபிரிகேனோ என்ற நபர் தன்னுடைய காதலி எரிகாவுடன் இத்தாலியின் சர்தினியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது அவரது காதலி எரிகா சாப்பிடும் போது ரொட்டியை கீழே கொட்டியதால் ஆத்திரமடைந்த திமித்ரி ஃபிரிகேனோ கடுமையான வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார்.
பின்னர் ஆத்திரத்தில் தனது காதலியை 57 முறை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
35-year-old Dimitri Fricano
இதையடுத்து திமித்ரி ஃபிரிகேனோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் 2022ல் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல் பருமன் அதிகரிப்பு
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட திமித்ரி ஃபிரிகேனோவுக்கு ஒரே ஆண்டில் தனது 120 கிலோ எடையில் இருந்து 200 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளது.
இதையடுத்து தனது உடல் எடையை குறைக்கும் வகையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் திமித்ரி ஃபிரிகேனோ நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம்,சிறையில் அவருக்கான குறைந்த கலோரிகள் கொண்ட உணவு கிடைக்கவில்லை என்பதால், திமித்ரி ஃபிரிகேனோ அவரது பெற்றோர் இல்லத்தில் வீட்டு காவலில் இருந்து உடல் எடையை குறைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் திமித்ரி ஃபிரிகேனோ அவரது சிறை வாழ்க்கையில் இருந்து வெளியேறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |