சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: பிலிப்பைன்ஸை தொடர்ந்து வெளியேறிய முக்கிய ஐரோப்பிய நாடு
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி விலகியுள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சீனாவின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் பிலிப்பைன்ஸ், இத்தாலி மற்றும் ஜி7 நாடுகள் நாடுகள் 2019ம் ஆண்டு கையெழுத்திட்டன.
இந்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை கருவியாக பயன்படுத்தி சீனா தனது பொருளாதார வளத்தை விரிவு படுத்த பயன்படுத்துவதாக சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸை தொடர்ந்து சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலியும் விலகுவதாக அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுவதாக சீனாவிடம் இத்தாலி தெரிவித்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார பாதைக்கு ஒப்புதல்
இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், இந்தியா முன்வைத்த பொருளாதார வழித்தட பாதைக்கு இத்தாலி உட்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்தியாவின் புதிய பொருளாதார வழித்தட பாதைக்கு உலக அரங்கில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

உணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு வந்த கட்டண ரசீது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |