இத்தாலியில் பயங்கரம்! வெடித்து தரைமட்டமான வீடுகள்., பலி எண்ணிக்கை அதிகரிப்பு
இத்தாலியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிசிலிய நகரமான ரவனுசாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 7 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது, அதனைத் தொடர்ந்து, இத்தாலிய தீயணைப்பு சேவையான Vigili del Fuoco, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் மற்றொரு நபர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார் என்று கூறியுள்ளது.
மேலும், இறந்த இரண்டு பேரில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்றும் கூறியுள்ளனர்.
இடிபாடுகளால் சிக்கியதாக நம்பப்படும், இன்னும் 7 பேரை காணவில்லை என்று விஜிலி டெல் ஃபுகோ கூறியுள்ளார். அதுபோக, 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
Photo: REUTERS/Antonio Parrinello
ரவனுசா மேயர் கார்மெலோ டி ஏஞ்சலோ (Carmelo D'Angelo) RAI தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், காணாமல் போனவர்களில் குழந்தைகள் இல்லை என்று கூறினார்.
பெரிய எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 3 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாயின மற்றும் மற்றொன்று சேதமடைந்ததாக இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ளது.
Photo: REUTERS/Antonio Parrinello
"எரிவாயு நிலத்தடியில் அல்லது மூடிய சூழலில் குவிந்துள்ளது. லிஃப்ட் செயல்பாட்டினால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என்று அக்ரிஜென்டோ தீயணைப்பு படையின் தளபதி கியூசெப் மெரெண்டினோ கூறியுள்ளார். "அடுத்த சில நாட்களில் நாங்கள் இன்னும் விரிவான விசாரணைகளை மேற்கொள்வோம்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Photo: REUTERS TV
Photo: REUTERS/Antonio Parrinello
Upcoming Photos Credit : REUTERS TV & Antonio Parrinello




