இத்தாலியில் 8 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்டோர் வீடற்று தவிப்பு
ரோமில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக இத்தாலிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து
இத்தாலியின் ரோமில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் தீ பற்றி பரவியதில் விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கோலி அனீன்(Colli Aniene) பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
VIGILI DEL FUOCO
இதற்கிடையில் ரோம் நகர தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர், அத்துடன் தீப்பற்றிய கட்டிடத்தில் மக்கள் யாரும் சிக்கியுள்ளனரா என்று சோதனை செய்து வருகின்றனர்.
மீட்பு பணியில் 6 குழுக்கள் வரை ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த தீ விபத்தானது உள்ளூர் நேரப்படி 14:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது, தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் அது குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
Sky News
தீ விபத்தில் உயிரிழந்த நபர் 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கவுன்சிலர் வழங்கிய தகவலில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தற்போது நிலையற்ற நிலையில் இருப்பதாகவும், 100 பேர் வரை வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.