இத்தாலியில் குடியிருப்புவாசிகள் கூட்டத்தில் துப்பாக்கி சூடு: 3 பெண்கள் கொலை
இத்தாலி தலைநகர் ரோமில் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
ஞாயிற்றுக்கிழமை இத்தாலி தலைநகர் ரோமில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இணைந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியை வெளியே எடுத்து சரமாறியாக சுட்டுள்ளார்.
Reuters
இதில் மூன்று பெண்கள் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், அத்துடன் சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
துப்பாக்கிதாரி கைது
ரோமின் Fidene மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு 57 வயதுடைய மனிதர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இத்தாலிய செய்தி நிறுவனமான Ansa சாட்சியங்களை மேற்கோள் காட்டி, கூட்டம் நடைபெற்ற அறைக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து கதவை அடைத்தார், மற்றும் உங்களை அனைவரையும் நான் கொலை செய்ய போகிறேன் என கத்தி கூறிவிட்டு துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார் என தெரிவித்துள்ளது.
Reuters