இவ்வளவு மோசமான நிலையை எதிர்கொண்டதில்லை... சாதாரணமாக கருத வேண்டாம்: கதறும் மக்கள்
கடும் வெப்ப அலையால் அவதிக்குள்ளாகும் இத்தாலி மக்கள், இவ்வளவு மோசமான வானிலையை எதிர்கொண்டதில்லை என தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
48C என உச்சம் தொடலாம்
இத்தாலியில் வார இறுதி நாட்களில் வெப்பநிலை 38C வரையில் அதிகரிக்கலாம் எனவும், திங்கட்கிழமைக்கு மேல் 40C தொடலாம் எனவும், சிசிலி மற்றும் சார்டினியா தீவுகள் பகுதிகளில் வெப்பநிலை 48C என உச்சம் தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
@epa
இத்தாலிய மக்கள் பலர், இதுபோன்ற ஒரு மோசமான சூழலை எதிர்கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ளதுடன், இது சாதாரண வெப்ப அலை அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது என குறிப்பிட்டுள்ள இத்தாலிய மக்கள், தற்போது வெப்பநிலை 40C என கொளுத்துகிறது என தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இந்த நிலையில், கடந்த கோடைகாலத்தில் ஐரோப்பா முழுமையும் வெப்ப அலை காரணமாக 61,672 பேர்கள் மரணமடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது.
@getty
இதனிடையே, தெற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வருவதால் இத்தாலி முழுவதும் 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரோம், புளோரன்ஸ் மற்றும் போலோக்னா ஆகிய பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நகரங்களாக குறிப்பிடுகின்றனர்.
மேலும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் பகல் 11 மணி முதல் மதியத்திற்கு மேல் 6 மணி வரையில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என இத்தாலிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிரீஸ், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் பல பகுதிகளும் தீவிர வெப்பநிலையை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, அமெரிக்கா, சீனா, வட ஆப்ரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் மக்கள் வெப்ப அலைகளை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |