வேலைக்கு செல்லாமல் 20 ஆண்டுகளாக ஊதியம் பெற்ற ஆசிரியை: அவர் சொன்ன கலங்கடிக்கும் பதில்
இத்தாலியில் 20 ஆண்டு காலம் வேலைக்கு செல்லாமல் ஊதியம் கைப்பற்றிய ஆசிரியை ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்பில் விசாரிக்க சென்றவர்களை ஒற்றை பதிலால் கலங்கடித்துள்ளார்.
24 ஆண்டுகள் ஆசிரியர் பணி
இத்தாலியில் தத்துவம் மற்றும் இலக்கிய ஆசிரியராக பணியாற்றியவர் Cinzio Paolina. ஆனால் தமது 24 ஆண்டுகள் ஆசிரியர் பணியில், இவர் வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பாடசாலைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
மட்டுமின்றி, 20 ஆண்டு காலம் பணிக்கு செல்லாமலே, ஊதியமும் கைப்பற்றி வந்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கான விடுமுறைகள், கருத்தரங்குகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் Cinzio Paolina கைப்பற்றியுள்ளார்.
இந்த விவகாரம் அம்பலமானதும், இது தொடர்பில் விசாரிக்க சென்ற செய்தி ஊடகத்திடம், நான் பதில் சொல்லும் நிலையில் தற்போது இல்லை எனவும், கடற்கரையில் பொழுது போக்குவதாகவும் தெரிவித்து கலங்கடித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது கருத்துக்கு உண்மையான நியாயம் அளிக்கப்படாத செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தாம் பதிலளிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெனிஸுக்கு அருகிலுள்ள சியோகியாவை தளமாகக் கொண்ட பாடசாலை ஒன்று இவர் மீது அளித்த புகார்களை அடுத்து 4 மாத கால இடைவெளிக்கு பின்னர் 2017ல் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர் பாடசாலைக்கு செல்லவில்லை
ஆனால், 2018ல் நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டார், இந்த நடவடிக்கை கல்வி அமைச்சகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
Image: LinkedIn
24 ஆண்டுகால ஆசிரியர் பணியில், முதல் 10 ஆண்டு காலம் முழுமையாக இவர் பாடசாலைக்கு செல்லவில்லை என்றே கூறப்படுகிறது. அதன் பின்னர் 14 ஆண்டு காலம் பல்வேறு காரணங்கள் கூறி, பாடசாலைக்கு செல்வதை அவர் தவிர்த்துள்ளார்.
மாணவர்கள் கூறியதில், அவர் என்ன பாடம் நடத்துகிறார் என்பதே அவருக்கு தெரிந்திருக்கவில்லை, மட்டுமின்றி, அவரிடம் உரிய பாடபுத்தகமும் இல்லை என குறிப்பிடுகின்றனர். தற்போது இத்தாலியின் மிக மோசமான ஊழியர் என்ற பட்டத்தை அவர் பணியாற்றியதாக கூறும் பாடசாலை நிர்வாகம் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |