பிரித்தானியர்களை பிடிக்க இத்தாலி அதிரடி நடவடிக்கை
யூரோ கால்பந்து போட்டியை காண ரோம் பயணிக்க முயற்சிக்கும் பிரித்தானியர்களை பிடிக்க இத்தாலி அதிரடி நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக THE SUN செய்தி வெளியிட்டுள்ளது.
யூரோ கால்பந்து தொடரில் ஜூலை 4ம் திகதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள Stadio Olumpico நடக்கும் காலிறுதிப்போட்டியில் உக்ரைன்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆனால், உக்ரைன்-இங்கிலாந்து மோதும் காலிறுதி போட்டியை காண பிரிட்டிஷ் ரசிகர்கள் இத்தாலி பயணம் செய்ய வேண்டாம் என இங்கிலாந்து மற்றும் இத்தாலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், இத்தாலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் மற்றும் பிரிட்டிஷ் கால்பந்து ரசிகர்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதைத் தடுக்க சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன என்று THE SUN தெரிவித்துள்ளது.
இத்தாலி சுகாதார அமைச்சகத்தின் துணை செயலாளர் Andrea Costa கூறியதாவது, விதிகள் தொளிவாகவும் நேர்த்தியாகவும் உள்ளன.
பிரிட்டிஷ் ரசிகர்கள் இத்தாலிக்கு பயணிக்க முடியாது. தற்போது ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் உள்ளது, எனவே ரசிகர்கள் ஜூன் 28 க்கு முன் வந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்தல் மட்டுமே ரோம் நகருக்கு பயணிக்க முடியும்.
விதிகளை மீறி ரோம் நகருக்கு பயணிக்க முயற்சித்து பிடிபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என Andrea Costa எச்சரித்துள்ளார்.