பாடல் வெளியிட்டு விமர்சனம்... பிரபல பாடகருக்கு கசையடியுடன் சிறை தண்டனையும் விதித்த நாடு
பெண்களுக்கு முக்காடு கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை விமர்சித்து பாடலை வெளியிட்ட பிரபல பாடகருக்கு ஈரானிய நீதிமன்றம் சிறை தண்டனையும் 74 கசையடிகளும் விதித்துள்ளது.
இஸ்லாமிய சமுதாயத்தின் ஒழுக்கம்
குறித்த தகவலை அவரது சட்டத்தரணி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 42 வயதான பாடகர் Mehdi Yarrahi கடந்த ஆகஸ்டு மாதம் சட்டவிரோத பாடலை வெளியிட்டதாக கூறி கைது செய்யப்பட்டார்.
குறித்த பாடலில் அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பில் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அக்டோபர் மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அவர் மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனையும், பொதுவெளியில் 74 கசையடிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள்
பாடகர் மெஹ்தி யர்ராஹி 'உங்கள் முக்காடு' என்ற தலைப்பில் பேர்சிய மொழியில் அந்த பாடலை வெளியிட்டிருந்தார். முக்காடு போடாத குற்றத்திற்காக ஈரானிய சிறப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் மரணமடைந்த Mahsa Amini என்ற இளம் பெண்ணின் நினைவு நாளுக்கும் சில நாட்கள் முன்னர் குறித்த பாடலை யர்ராஹி வெளியிட்டிருந்தார்.
@afp
2022 செப்டம்பர் மாதம் Mahsa Amini மரணமடைந்த சம்பவம் ஈரான் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் பொலிஸார் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதாகினர். முன்னர் 2022 அக்டோபர் மாதம் யர்ராஹி வெளியிட்ட Soroode Zan என்ற பாடல் பொதுமக்கள் மத்தியிலும் ஈரான பல்கலைக்கழகங்களிலும் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் கீதமாக மாறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |