ஒரே டெஸ்டில் 4 கேட்சுகளை தவறவிட்ட முதல் இந்திய வீரர்: லீட்ஸ் போட்டியில் மோசமான சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
லீட்ஸின் ஹெடிங்லே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 101 ஓட்டங்கள் விளாசினார்.
ஆனால் அவர் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்பட்டார். மொத்தம் 4 கேட்சுகளை ஜெய்ஸ்வால் தவறவிட்டார்.
மோசமான சாதனை
குறிப்பாக, இரண்டாவது டெஸ்டில் 97 ஓட்டங்களில் இருந்த பென் டக்கெட்டின் கேட்சை தவறவிட்டதால், அவர் 149 ஓட்டங்கள் குவித்தார்.
இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஒரே டெஸ்டில் 4 கேட்சுகளை தவறவிட்ட முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
போட்டியின் முக்கிய தருணங்களில் அவரது ஃபீல்டிங் செயல்பாடு மோசமாக இருந்ததும், தோல்விக்கு ஒரு காரணம் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |