ரூ.7,867 கோடி மதிப்புள்ள பிட்காயினை குப்பையில் வீசிய காதலி - உரிமையாளர் எடுத்துள்ள முடிவு
குப்பை கிடங்கில் உள்ள தனது 8000 பிட்காயின் ஹார்டுடிரைவை தேடி எடுக்க முடியாத நிலையில், அதன் உரிமையாளர் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
குப்பைக்கு சென்ற 8000 பிட்காயின்
பிரித்தானியாவின் நியூபோர்ட் நகரத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹோவெல்ஸ்(James Howells).
இவர் 2009 ஆம் ஆண்டு 8000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். அதன் இன்றைய மதிப்பு ஏறத்தாழ 900 மில்லியன் டொலர் என மதிப்பிடப்படுகிறது.
அதை வாங்கியதை அவர் மறந்து விட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டில் வீடுகளை சுத்தப்படுத்தும் போது தற்செயலாக அந்த பிட்காயின்கள் மற்றும் அதன் டிஜிட்டல் கீ அடங்கிய ஹார்ட்டிரைவை, அவரது முன்னாள் காதலி ஹல்பினா எட்டி-இவான்ஸ் குப்பையில் வீசியுள்ளார்.
இது குறித்து அவரது காதலியிடம் கேட்டபோது, "அதில் என்ன இருந்தது என்பதே எனக்கு தெரியாது இது என் தவறல்ல" என தெரிவித்துள்ளார்.
தேடல் தோல்வி
தற்போது அந்த ஹார்ட்டிரைவ், நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் 2 லட்சம் டன் கழிவுகளுக்கு கீழே புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குப்பை கிடங்கில் அவர் தனது ஹார்டுடிரைவை தேட அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், சுற்றுசூழல் மாசு ஏற்படும் எனக்கூறி நியூபோர்ட் நகர சபை அதற்கு அனுமதி மறுத்தது.
ஹார்ட்டிரைவ் கிடைத்தால், அதில் 10 சதவீதத்தை நகர மேம்பாட்டிற்கு தருவதாக கூறியும் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த போதும், அவருக்கு பலனளிக்கவில்லை.
3 மில்லியன் டொலருக்கு அந்த குப்பை கிடங்கை வாங்கவும் அவர் முன்வந்தார். அதிலும் தோல்வியே கிடைத்தது.
அடுத்த திட்டம்
இந்நிலையில், அந்த 8000 பிட்காயின் மதிப்புகளின் அடிப்படையில், ஒரு Defi டோக்கன் திட்டத்தை அவர் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
But I am done asking permission.
— James Howells (@howelzy) August 4, 2025
So I’m tokenizing the entire wallet - 8,000 BTC - into 800B Ceiniog Coin (INI) - 1:1 satoshi value match
• Built on Bitcoin
• Powered by OP_RETURN
• Integrates with Stacks, Runes, Ordinals
• Launching Late-2025
The vault is mine, and I say: pic.twitter.com/mC3pPK3qcm
இது பிளாக் செயின் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட லேயர் 2 டோக்கன் ஆகும்.
இதன் மூலம், அந்த நாணயத்தின் சட்டபூர்வ உரிமையை கோர முடியாது. ஆனால், இது ஒரு ப்ரோக்ஸியாக செயல்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |