ஜப்பானில் 10 பேர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயம்: தொடரும் தேடுதல் வேட்டை
ஜப்பானின் தெற்கு பகுதியான மியாக்கோ தீவில் 10 ராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் மாயம்
ஜப்பானின் தெற்கு பகுதியான மியாக்கோ தீவில் 10 நபர்களை கொண்ட குழு தரைப்படையின் ஹெலிகாப்டரில் ஏறி சென்றுள்ளனர்.
@gettyimages
UH-60 Black Hawk என்ற பாதுகாப்பு ஹெலிகாப்டரில் 10 ராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த பணிக்காக மியோக்கோ தீவருகே சென்றுள்ளனர்.
இன்று மாலை திடீரென ஹெலிகாப்டரிலிருந்து வரும் ரேடார் சிக்னல் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரை அவர்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.
தேடுதல் வேட்டை
இதனை தொடர்ந்து ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
@istock
இதையடுத்து கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரிலுள்ள நான்கு தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்தும் கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஜப்பான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.