5 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது பெண் : பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு 90 வயதுடைய பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பான் உலகில் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாகும். இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களின் கடற்கரையில் நிலநடுக்கங்கள் பதிவாகியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
REUTERS
இந்த நிலநடுக்கத்தினால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 200 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் 90 வயதுடைய மூதாட்டி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட 90 வயது பெண்
இஷிகவா மாகாணம் சுஸு நகரத்தில் இருக்கும் ஒரு மூதாட்டியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவருக்கு 90 வயதாகும். மேலும் இவர் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் நிலநடுக்கத்தின்போது கொதிநீர் பட்ட காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
REUTERS
விமானங்கள் மற்றும் படகுகள் மூலமான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
30,000க்கும் மேற்பட்டோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, இஷிகாவாவில் சுமார் 23,200 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளன. மற்றும் 66,400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |