ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் சேதம், காயமடைந்த மக்கள் - அதிர்ச்சி வீடியோ
ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்
ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்திய நேரப்படி இன்று மதியம் 2:42 மணிக்கு, ஜப்பானின் உள்ளூர் நேரப்படி (0542 GMT)10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா (Nagano and Kanazawa) இடையே ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனையடுத்து மக்கள் அலறி வீட்டை விட்டு வெளியே ஓடி, பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் சிலர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
@NikkeiAsia
இது குறித்து தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ பேசுகையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார். பூகம்பத்தால் ஏற்படும் சேதம் மற்றும் தாக்கத்தைப் பொறுத்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என்றார். தற்போது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This video was filmed inside a Ferris wheel in Toyama prefecture right after the earthquake.
— Satoe Aoki?? (@a3o1k4i514) May 5, 2023
A seismic intensity of 3 was recorded in Toyama prefecture.#Japan#earthquakepic.twitter.com/rRZTrgj3KS
#terremoto #Japan #Japon #地震 #石川県 #earthquake
— Chris' Sleuth Entertainment (@Sleuthfilms) May 5, 2023
El momento del terremoto en #Ishikawa. Lo siento mucho por el pueblo de Japón.
The moment of the earthquake on Ishikawa. I am deeply sorry for japanese people
??♥️ pic.twitter.com/PxHNAbXPE3
A magnitude 6.3 earthquake took place Near West Coast Of Honshu, Japan at 05:42 UTC. The depth was 10km.#earthquake #Japan #Honshu #deprem #News pic.twitter.com/SuAY79Pc27
— Chaudhary Parvez (@ChaudharyParvez) May 5, 2023