ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மனித தலை: கரடி தாக்கி மீனவர் கொல்லப்பட்டதாக அச்சம்
ஜப்பானில் மீனவர் ஒருவர் காணாமல் போன பகுதியில் மனித தலை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த நபர் கரடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீன்பிடிக்க தனியாக சென்ற நபர்
54 வயதான தோஷிஹிரோ நிஷிகாவா, நாட்டின் வடக்கு ஹொக்கைடோ தீவில் உள்ள ஷுமரினாய் ஏரியில் ஒரு படகில் இறக்கிவிடப்பட்டார். அவர் மீன்பிடிக்க அங்கு துணையின்றி தனியாக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகு நடத்துனரின் ஊழியர் ஒருவர் பின்னர் அருகில் ஒரு கரடி இருப்பதைக் கண்டு நிஷிகாவாவை அழைக்க முயன்றார், ஆனால் அவரை அணுக முடியவில்லை என்று கூறினார்.
Credit: Shutterstock
ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மனித தலை
இதையடுத்து, அப்பகுதியில் கரடி வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டு, அங்கு ஒரு கரடி கொல்லப்பட்டதாக டவுன் பொலிசார் தெரிவித்தனர். பொலிஸார் கண்டுபிடித்த தலை ஹொக்கைடோவில் உள்ள ஓகோப்பேவில் வசிக்கும் நிஷிகாவாவின் தலையா என்று இப்போது விசாரித்து வருகின்றனர்.
ஜப்பானில் அரிதாக பிடிபடும் சகலின் டைமென், ட்ரவுட் மற்றும் ஜப்பானிய ஸ்மெல்ட் போன்ற மீன்களுக்காக, அங்கு செல்லும் உள்ளூர் மீனவர்களிடையே இந்த ஏரி பிரபலமானது.
அவசர எச்சரிக்கை
கரடி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், நகர அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ணைப் பணிகள், வனப் பணிகள் அல்லது மலைப்பகுதிகளுக்கு அருகில் உள்ள மலைகளுக்குச் செல்லும்போது தயவுசெய்து கவனமாக இருக்கவும் என்று அதிகாரிகள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Credit: Lake Shumarinai/Facebook
ஜப்பானில், கிரிஸ்லி கரடி என்றும் அழைக்கப்படும் உசுரி பழுப்பு கரடி பொதுவாக ஹொக்கைடோவில் காணப்படுகிறது.
ஜப்பானின் முக்கிய வடக்கு தீவில் 6,500 முதல் 10,000 உசுரி பழுப்பு கரடிகள் வசிக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவை 7 அடி 6 அங்குலம் வரை பயமுறுத்தும் உயரத்தை எட்டும் மற்றும் 250 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும்.