ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலின் மேற்பரப்பிற்கு அருகில் அதாவது சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமோரி(Aomori) மாகாணத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டி நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடலோர பகுதிக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) சுனாமி எச்சரிக்கைய வெளியிட்டுள்ளது.
எதிர்பார்க்க கூடிய இந்த சுனாமி அலைகள் சுமார் 1 மீட்டர் உயரம் வரை எட்டக்கூடும் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தாழ்வான மற்றும் ஆபத்தான இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் தான் நான்கு நாட்களுக்கு முன்பு 7.6 ரிக்டர் என்ற மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |