டீன் ஏஜ் பெண் எடுத்த வீபரித முடிவு: இறுதியில் நடந்து சென்றவரின் தலையில் விழுந்த சோகம்
ஜப்பான் உயிரை மாய்த்து கொள்ள முயன்ற இளம்பெண் ஒருவர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பெண் மீது விழுந்ததில் இருவரும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண்ணின் விபரீதம்
ஜப்பானின் Yokohama நகரில் உள்ள வணிக வளாகத்தின் மாடியில் இருந்து இளம் டீன் ஏஜ் பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளவதற்காக குதித்த போது, சாலையில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பெண் மீது விழுந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சனிக்கிழமை 17 வயதுடைய உயர் கல்வி மாணவி உயிரை மாய்த்துக் கொள்வதற்காக வணிக வளாகத்தின் மாடியில் இருந்து குதித்த நிலையில், நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த 32 வயது பெண் மீது விழுந்தார்.
இதையடுத்து இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு மணி நேரத்தில் டீன் ஏஜ் பெண் உயிரிழந்தார், அவரை தொடர்ந்து 32 வயது பெண்ணும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
டீன் ஏஜ் பெண் உயிரை மாய்த்து கொண்டதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
[CFI0M6X ]
ஆனால் புள்ளிவிவரங்களின் படி, செப்டம்பர் 1ம் திகதி அதாவது புதிய பள்ளி பருவத்திற்கு சற்று முன்னதாக ஜப்பானில் 18 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |