அமெரிக்க - உக்ரைன் உறவை தனியொருவனாக முடித்து வைத்த ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், உக்ரைன் ஜனாதிபதியை கடுமையாக சாடி, இரு நாடுகளுக்குமான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளார் துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸ்.
ரஷ்ய ஆதரவு நிலை
இதனால் உக்ரைன் தொடர்பில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போருக்குப் பிந்தைய கூட்டணி இறுதியாக முறிவை சந்தித்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கூட்டு சந்திப்பின் போது ட்ரம்ப் மற்றும் வான்ஸ் ஆகியோர் ஜெலென்ஸ்கியை கோபம் கொள்ள வைத்ததுடன், ரஷ்ய ஆதரவு நிலையை மறைமுகமாக முன்னெடுத்தனர்.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான பொய்யான ஒரு பரப்புரையை ஜெலென்ஸ்கி முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், ஓவல் அலுவலகத்திற்குள் வந்து அமெரிக்க ஊடகங்களுக்கு முன்னால் சண்டையிட முயற்சிப்பது மரியாதைக் குறைவு என்று நான் நினைக்கிறேன்.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்திற்கு வந்து உங்கள் நாட்டின் அழிவைத் தடுக்க முயற்சிக்கும் நிர்வாகத்தைத் தாக்குவது மரியாதைக்குரியது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்றும் வான்ஸ் கொந்தளித்துள்ளார்.
ஆனால் ஜெலென்ஸ்கியின் பதிலுக்கு காத்திருக்காமல், அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்பதை ஜெலென்ஸ்கி எங்களுக்கு குறிப்பிடத் தேவையில்லை என்றும் ட்ரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனை மொத்தமாக பலமுனைகளில் இருந்து வான்ஸ் தாக்குவது இது இரண்டாவது முறை. மியூனிக்கில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், உக்ரைன் மற்றும் ஜெலென்ஸ்கியை வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் கட்டாயம் என்றும், உக்ரைனுக்கு ஒரு புதிய தலைவர் தேவை என்றும் வாதாடிய வான்ஸ், மக்கள் செல்வாக்கை இழந்த ஒரு தலைவருக்கு அமெரிக்கா ஆதரவளிக்காது என்றும் வெளிப்படையாக மிரட்டினார்.
புடினுக்கு பக்கபலமாக
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவிக்கையில், வான்ஸ் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் நமக்குள் ஒரு மோதலை உருவாக்கும் முயற்சி என்றும், நாங்கள் நமது நண்பர்களுடன் சண்டையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கி மீது முழுமையான தாக்குதலை வான்ஸ் முன்னெடுத்துள்ளார். அதேவேளை, மொத்த ஐரோப்பிய நிர்வாகமும் ஜெலென்ஸ்கியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் குழுவின் செயல்பாடு, போரில் அமெரிக்கா உண்மையிலேயே விளாடிமிர் புடினுக்கு பக்கபலமாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்றும் பதிலடி அளித்துள்ளது.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்
ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டே உக்ரைன் உடனான உறவை முறித்துக் கொள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பை பயன்படுத்திக் கொண்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, ஜோ பைடன் நிர்வாகம் எப்போதெல்லாம் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதோ, அப்போதெல்லாம் அதற்கு எதிராக வாக்களித்து வந்தவர் தற்போதைய துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |