21,680 கோடிக்கு சொந்தக்காரரான அமேசான் நிறுவனர் மனைவிக்கு அளிக்கவிருக்கும் பிரம்மாண்ட திருமணப்பரிசு
அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் தனது காதலியான லாரன் சான்ச்சேஸை இந்த கோடையில் கரம்பிடிக்க உள்ள நிலையில், தன் வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசொன்றை வழங்கியுள்ளார் ஜெஃப்.
மனைவிக்கு அளிக்கவிருக்கும் திருமணப்பரிசு
21,680 கோடி அமெரிக்க டொலர்களுக்கு சொந்தக்காரர், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்.
இவ்வளவு பெரிய கோடீஸ்வரர், தன் மனைவிக்கு திருமணப் பரிசாக என்ன கொடுக்கமுடியும்?
ஆகவே, தன் வருங்கால மனைவியால லாரனுக்கு வித்தியாசமான பரிசொன்றைக் கொடுக்க முடிவு செய்துள்ளார் ஜெஃப்.
ஆம், தன் மனைவியை தனது Blue Origin நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார் ஜெஃப்!
லாரனுடன், பிரபலங்களான Gayle King, Katy Perry மற்றும் மூன்று பெண்களும் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |