பள்ளி சீருடையில் பழங்குடியின சிறுமியை உதைத்து தாக்கிய சிறுவன்! வீடியோ வைரலானதால் முதல்வர் நடவடிக்கை
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் பழங்குடியின சிறுமியை வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியை சிறுவன் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பழங்குடியின மாணவி என்று கூறப்படுகிறது. வீடியோவில், சிறுவன் சிறுமியை மீண்டும் மீண்டும் உதைப்பதைக் காணலாம். சிறுமி சீருடையில் பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படுகிறார்.
சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்! வைரலாகும் வீடியோ
சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பற்றிய வீடியோ மற்றும் விவரங்களை வெளியிட்ட ட்வீட்டிற்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று பதிலளித்தார். அவரது பதில் ட்வீட்டில் "இந்த விடயத்தை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு தெரிவிக்கவும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்திய பொலிஸார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தும்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
லண்டன் போக்குவரத்து டிப்போவில் பயங்கர வெடிவிபத்து: தீப்பிடித்து எரிந்த பேருந்துகள்
#Jharkhand: CM Hemant Soren has directed police to identify the accused and take appropriate action after a video of a school girl being beaten by a young boy went viral on social media.@NewIndianXpress@TheMornStandard @santwana99 pic.twitter.com/Adi992Un64
— Mukesh Ranjan (@Mukesh_TNIE) May 22, 2022
இந்த வழக்கில் தும்கா காவல்துறை தற்போது மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று பாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஹ்ருதீப் பி ஜனார்த்தனன் தெரிவித்தார்.
முதல் பார்வையில், இது ஒரு காதல் விவகாரம் போல் தெரிகிறது என்று தும்கா துணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி (SDPO) நூர் முஸ்தபா அன்சாரி கூறினார்.
அதிரடி காட்டிய லியாம் லிவிங்ஸ்டன்! ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி