லண்டன் போக்குவரத்து டிப்போவில் பயங்கர வெடிவிபத்து: தீப்பிடித்து எரிந்த பேருந்துகள்
லண்டனில் போக்குவரத்துக் களஞ்சியசாலையில் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேருந்துகள் தீக்கிரையாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெட்ரோலைன் பஸ் கேரேஜில் ஏராளமான வாகனங்கள் பயங்கரமாக தீப்பிடித்து எரிவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
நேரில் பார்த்த சாட்சியான ஷான் கன்னிங்ஹாம், 'ஜெட் விமானம் போன்ற ஒரு நம்பமுடியாத சத்தம்' கேட்டதாகக் கூறினார், மேலும் ஒரு பேருந்து பாரிய தீப் பந்தம் போல் எரிந்துகொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார்.
சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்! வைரலாகும் வீடியோ
இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடுவதையும், ஒரு பெரிய கறுப்பு புகை மூட்டத்தையும் காணமுடிகிறது. பின்னர் வெளியான புகைப்படங்கள் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக நிற்கும் பேருந்துகளைக் காட்டுகின்றன.
சம்பவத்தின்போது, Hertfordshire Fire and Rescue குழு அதன் ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் தற்போது பாட்டர்ஸ் பார் ஹை ஸ்ட்ரீட்டில் ஒரு பெரிய தீ விபத்தில் கலந்து கொண்டுள்ளோம். முடிந்தால் அந்தப் பகுதியைத் தவிர்க்கவும்" என பதிவிட்டிருந்தனர்.
பள்ளி சீருடையில் பழங்குடியின சிறுமியை உதைத்து தாக்கிய சிறுவன்! வீடியோ வைரலானதால் முதல்வர் நடவடிக்கை
செயின்ட் அல்பான்ஸில் 11 மைல் தொலைவில் இந்த தீவிபத்தில் புகை காணப்படுவதாக சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.